அயற்பணி

  1. 1974க்குப் பின் கூட்டுறவு சார்பதிவாளர் நேரடி நியமனத்தை நிறுத்தி வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு பதவி உயர்வுகளுக்கு வழிவகை செய்யப்பட்டது.
  2. துணைப்பதிவாளர் நேரடி நியமனம் நிரந்தரப் பணியிடத்தில் 25% என்ற நீதிமன்ற ஆணைப்பெற்று (வழக்குஎண்.526/90) அதிக அளவில் கூட்டுறவு சார்பதிவாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டது.
  3. சிறப்புத் தேர்வு மூலம் வந்த 1230 இளநிலை ஆய்வாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த, சிறப்பு விதி எண். 9 மற்றும் 10க்கு எண்.5828/92 மூலம் விதிவிலக்கு பெற்றோம். அரசாணை எண்.115, 116 நாள் 17.5.95ல் நம் சங்கப்பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அப்போதைய மாநில தலைவர் திரு.பால்பாண்டியன் அவர்களின் சாதனையாகும்.
  4. மேற்கண்ட அரசாணை காரணமாக 08.08.1995ல் முதல் கட்டமாக 450 பேர் முதுநிலை ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

அயற்பணி சம்பளம்

  1. அரசு அலுவலர்கள் பெருவாரியாக உறுப்பினராக உள்ள பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கு வட்டி உயர்வு செய்த போது ஏற்கனலே பெற்று நிலையிலிருந்த கடனுக்கும் சேர்த்து வட்டி உயர்வு கணக்கிடப்பட்டது. அது குறித்து பதிவாளரின் கவனத்திற்கு எடுத்து சென்று வட்டி குறைக்கப்பட்டது.
  2. கடந்த காலங்களில் பதவி உயர்வு மூலம் துணைப்பதிவாளர் பதவியிடங்களை நிரப்பும் சதவீதத்தை விட அதிக சதவீதம் நேரடி நியமனம் மூலம் செய்யப்பட்டு வந்ததை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று பெருமுயற்சியின் மூலம் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றிற்கிடையில் உள்ள விகிதாரசாரத்தினை முறைப்படுத்தி நேரடி துணைப்பதிவாளர் நியமனம் கட்டுப்படுத்தியது. நமது சங்கத்தின் வெற்றியாகும்.
  3. நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக கூட்டுறவு சார்பதிவாளருக்கு தர ஊதியம் ரூ.4900/- இருந்ததை உயர்த்தி ரூ.5100/-எனவும், முதுநிலை ஆய்வாளர்களுக்கு தர ஊதியம் ரூ.4400/- இருந்ததை உயர்த்தி ரூ.4500/- எனவும், இளநிலை ஆய்வாளர்களுக்கு தர ஊதியம் ரூ.2400/- இருந்ததை உயர்த்தி ரூ.2800/- எனவும் மாற்றம் செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.