கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் சங்கம் துறை அலுவலர் நலன் காக்க ஆற்றிய பணிகள் பல... அவற்றுள் சில உங்களின் கனிவான கவனத்திற்காக...
- 1974க்குப் பின் கூட்டுறவு சார்பதிவாளர் நேரடி நியமனத்தை நிறுத்தி வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு பதவி உயர்வுகளுக்கு வழிவகை செய்யப்பட்டது.
- துணைப்பதிவாளர் நேரடி நியமனம் நிரந்தரப் பணியிடத்தில் 25% என்ற நீதிமன்ற ஆணைப்பெற்று (வழக்குஎண்.526/90) அதிக அளவில் கூட்டுறவு சார்பதிவாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கப்பட்டது.
- சிறப்புத் தேர்வு மூலம் வந்த 1230 இளநிலை ஆய்வாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த, சிறப்பு விதி எண். 9 மற்றும் 10க்கு எண்.5828/92 மூலம் விதிவிலக்கு பெற்றோம். அரசாணை எண்.115, 116 நாள் 17.5.95ல் நம் சங்கப்பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அப்போதைய மாநில தலைவர் திரு.பால்பாண்டியன் அவர்களின் சாதனையாகும்.
- மேற்கண்ட அரசாணை காரணமாக 08.08.1995ல் முதல் கட்டமாக 450 பேர் முதுநிலை ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.
- அதன் தொடர்ச்சியாக இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்கள் பதவி உயர்வு பெற்று 10.01.1996ல் மதுரை மற்றும் சென்னையில் சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- அரசாணை எண்.26, நாள். 15.02.1996 மூலம் பால் கூட்டுறவுத் தணிக்கை நமது துறை கட்டுப்பாட்டில் தனித்து இயங்க வழிவகுக்கப்பட்டது.
- வழக்கு எண். 975/91 மூலம் பதிவாளர் அலுவலக தனிப்புலனாய்வுப் பிரிவு பணியிடங்கள் தணிக்கைத்துறைக்கு செல்லாமல் தக்கவைக்கப்பட்டது.
- இரண்டாம் நிலைப் பதவி உயர்வு பெற்றோர் தனித் தற்காலிகப் பணிக்காலத்தைச் சேர்த்து தேர்வு நிலை ஊதியம் பெற்றதை விலக்குமாறு மாநிலக் கணக்காயர் ஆணையிட்டதை வழக்கு எண்.52/96 மூலம் தடுத்துநிறுத்தப்பட்டது.
- தேர்தலுக்குப் பின் பதவி இறக்கம் வரும் என சிலர் பயமுறுத்தி போது பதிவாளர் மற்றும் அரசிடம் தக்கவாறு முறையிட்டுப் பணியிடங்களை நிலைப்படுத்தப்பட்டது.
- அயற்பணியில் நடந்த தவறுகளுக்குத் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் படுவோர் அயற்பணி நிறுவனத்தில் பிழைப்பூதியம் பெற வேண்டும் என்ற விதிக்குத் தடை ஆணை பெற்று அரசு நிதியில் பிழைப்பூதியம் பெற வழி வகுக்கப்பட்டது.
- பரமக்குடி, உத்தமபாளையம் போன்ற இடங்களில் துணைப்பதிவாளர் அலுவலங்கள் ஏற்பட பாடுபட்டோம்.
- நியாய விலைக்கடை பணியாளர் செய்யும் தவறுகட்கு துறை அலுவலர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்யும் பதிவாளரின் கட்டளையை வழக்கு எண்.4555/97 மூலம் தடுத்து நிறுத்தினோம்.
- நுகர்பொருள் வாணிபக் கழக மேற்பார்வையாளர்கள் 140 பேர் நம் துறையில் பணியமர்த்த பிறப்பித்த அரசாணையை வழக்கு எண்.14018/97 மூலம் தடுத்து நிறுத்தினோம்.
- பொது விநியோகத்திட்ட களப்பணியாளர்கட்கு நிலைத்த பயணப்படிக்கு பதில் முகாம் பயணப்படி பெற ஆணை பெற்றோம்.
- சிறப்பு தற்காலிக கூட்டுறவு சார்பதிவாளர் பணிக்காலத்தை கூட்டுறவு சார் பதிவாளர் பதவியில் தேர்வுநிலை/சிறப்பு நிலைக்கு சேர்த்துக் கொள்ள ஆணை பெறப்பட்டது.
- அரசு இரண்டு முறை மறுத்து ஆணை வெளியிட்ட பின்னரும் இடைவிடா 'முயற்சி செய்து சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு விதிவிலக்கு பெற்று முன்தேதியிட்டு 288 இளநிலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
- பால் கூட்டுறவு தணிக்கைத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டு பணியாற்றினால் பதவி உயர்வு பெற தாய் துறையில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதிகளை தளர்த்தி 30 முதுநிலை ஆய்வாளர்களுக்கு கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
- நிறுத்தப்பட்டிருந்த சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3க்கு உதவியாளர் பதவி உயர்வு மீண்டும் வழங்குதல் தொடர்பாக ஆணை வழங்கப்பட்டுள்ளது (அரசு ஆணை நிலை எண்.34) பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (பி) துறை நாள் 29.1.2001).
- தமிழ்நாடு அமைச்சுப்பணித தொகுதி கீழ்நிலை பதவிகளில் பணிபுரிவோருக்கு பதவி மாற்றம் மூலம் (by-transfer) இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் பணியமர்வு. இளநிலை உதவியாளார் பணி காலியிட மதிப்பீட்டில் 20 விழுக்காடு, தட்டச்சர் பணி காலியிட மதிப்பீட்டில் 20 விழுக்காடு எனத் தனித்தனியாக ஒவ்வொரு பதவிக்கும் பதவி மாற்றம் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. (அரசுக் கடிதம் எண்.536/பி2/2001-02பொதுப்பணி (2)..02.03.2001
- தர்மபுரி,பெரம்பலூர், இணைப்பதிவாளர்களுடன் துறை அலுவலர்களின் பிரச்சனைகள் பற்றி எடுத்துக்கூறி சுமூக நல்லுறவுக்கு வழிவகுத்தல். P.D.S ல் ஆண்டுகள் பணியாற்றிய அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றி அரச வெளியிட்ட ஆணையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை.
- 2003-2004, 2004-2005, 2005-2006 ஆகிய ஆண்டுகளுக்கு துணைப்பதிவாளர் பதவி உயர்வு தாமதமாவதை மாற்றி கடந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் துணைப்பதிவாளராக பதவி உயர்வு பெற நமது சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
- இளநிலை உதவியாளர் இளநிலை ஆய்வாளராக பதவி உயர்வு பெற நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று முதற்கட்டமாக செப்டம்பர் 07ல் 23 பேருக்கு பதவி உயர்வு பெற்று பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் எஞ்சிய காலிப் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு பட்டியல் கோர சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
- முதுநிலை ஆய்வாளரிலிருந்து கூட்டுறவு சார் பதிவாளர் பதவி உயர்வில் நிலவி வரும் தேக்க நிலைக்கு தீர்வு கண்டு 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- நமது சங்க முயற்சியின் மூலம் அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் பணியிடங்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்க ஆணையிட்டதை தடுக்க பதிவாளரை நேரில் சந்தித்து அப்பதவியின் அவசியத்தை வலியுறுத்தி அந்நடவடிக்கை தடுக்கப்பட்டது.
- கூட்டுறவு மேலாண்மை நிலையங்களை மாநில கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைப்பதால் துணை துணைப்பதிவாளர் பணியிடம் உள்ளிட்ட பணியிடங்கள் இழப்பு ஏற்படாமைக்கு பதிவாளரை சந்தித்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- ஒரு சில மண்டலங்களில் மண்டல மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் அந்தந்த மாவட்டங்களுக்கே ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
- நியாயவிலை அங்காடிகளில் கூட்டுறவு துறையினரால் போலி ரேசன் கார்டுகள் கைப்பற்றப்பட்டு திருப்பி அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் போது, கூட்டுறவுத்துறை அலுவலர்களின் ஒப்புதல் வழங்கிய பின்பே வழங்கிட வேண்டும் என ஆணையிடப்பட்டது.
- கிராமப்புற பகுதிகளில் சமையல் எரிவாயு வழங்கும் பணி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு மாநில அரசு, மத்திய அரசுக்கு அனுமதி கோரியுள்ளது.
- மண்டலத்தில் பணிபுரியும் சார்நிலை அலுவலர்களுக்கு ஏற்படும் பணிப்பிரச்சனைகள் தொடர்பாக உடனுக்குடன் மாநில நிர்வாகிகள் பதிவாளர் அவர்களை சந்தித்து பிரச்சனைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
- பணிநியமனங்கள் தொடர்பாக சார்நிலை அலுவலர்கள் மீது 17(ஆ)வின் கீழ்மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை இனம்வாரியாக ஆய்வு செய்து 17(அ) ஆக மாற்ற பதிவாளர் அவர்களை நமது சங்கம் கோரியதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட விபரங்கள் மண்டலங்களிலிருந்து கோரப்பட்டுள்ளது நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
- அரசாணை எண். 100 மூலம் சார்நிலை அலுவலர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடமாக மாற்றியது மட்டுமின்றி, கூட்டுறவு துறைக்கென்று ஒட்டுமொத்த ப பணியிடங்களுக்கென்று பணிநிலையத்தின் பெற்று அனைத்து பணியிடங்களையும் நிரந்தரப்படுகிறது.
- திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இணைப்பதிவாளர் அலுவலகங்கள் உருவாக்கப்பட பாடுபட்டது.
- குளித்தலை. சிதம்பரம், ஒசூர், திருப்பூர், தாராபுரம், விழுப்புரம். குடியாத்தம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் துணைப்பதிவாளர் அலுவலகங்கள் உருவாக பாடுபட்டது.
- பிரிவு 81-ன் கீழ் விசாரணை'அலுவலர்களை குற்ற வழக்கில் சேர்ப்பதை தவிர்க்க நாம் பதிவாளருக்கு விடுத்த கோரிக்கை மீது நடவடிக்கையினை பதிவாளர் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேதகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு Crl.op. No. 11872 1188/2007.ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான மாவட்ட அளவிலான காலமுறைக் கூட்டங்களை நடத்துவதற்கு பதிவாளர் அவர்களிடமிருந்து ஆணை பெற்றது.
- துறையில் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு பெற்றிட பாடுபட்டு பெற்று தந்தது.
- ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைந்து நிவர்த்தி செய்திட தாய் சங்கமான என்.ஜி.ஓ. உடன் இணைந்து செயல்பட்டு பெற்றுத் தந்தது.
- திருச்சி மாவட்டத்தில் 2 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 1 கூட்டுறவு சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணையை ரத்து செய்து மீறி பணியமர்த்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட் ளப்பட்டது.
- கோவை மற்றும் சேலத்தில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட துறை பணியாளர்கள் நமது சங்கத்தின் முயற்சியினால் மீளவும் பணியமர்த்தம் செய்யப்பட்டனர்.
- கூட்டுறவு சார்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பதவி உயர்வு பணியில் சேர்வதற்கு முன்பு 17 (ஆ)இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ந்த நிலையை 17 (அ)இன் கீழ் குற்றச்சாட்டாக மாற்றி பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- மேற்கண்ட பணி ஓய்வு பெறும் தருணத்தில் ஒழுக்கு நடவடிக்கை தற்காலிக பணி நீக்கம் செய்திடக் கூடாது என நமது சங்கம் பல்வேறு கூட்டுமன்ற கூட் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தது. அதன் பேரில் பதிவாளரால் உரிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- அரசு அலுவலர்கள் பெருவாரியாக உறுப்பினராக உள்ள பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களுக்கு வட்டி உயர்வு செய்த போது ஏற்கனலே பெற்று நிலையிலிருந்த கடனுக்கும் சேர்த்து வட்டி உயர்வு கணக்கிடப்பட்டது. அது குறித்து பதிவாளரின் கவனத்திற்கு எடுத்து சென்று வட்டி குறைக்கப்பட்டது.
- கடந்த காலங்களில் பதவி உயர்வு மூலம் துணைப்பதிவாளர் பதவியிடங்களை நிரப்பும் சதவீதத்தை விட அதிக சதவீதம் நேரடி நியமனம் மூலம் செய்யப்பட்டு வந்ததை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று பெருமுயற்சியின் மூலம் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகியவற்றிற்கிடையில் உள்ள விகிதாரசாரத்தினை முறைப்படுத்தி நேரடி துணைப்பதிவாளர் நியமனம் கட்டுப்படுத்தியது. நமது சங்கத்தின் வெற்றியாகும்.
- நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக கூட்டுறவு சார்பதிவாளருக்கு தர ஊதியம் ரூ.4900/- இருந்ததை உயர்த்தி ரூ.5100/-எனவும், முதுநிலை ஆய்வாளர்களுக்கு தர ஊதியம் ரூ.4400/- இருந்ததை உயர்த்தி ரூ.4500/- எனவும், இளநிலை ஆய்வாளர்களுக்கு தர ஊதியம் ரூ.2400/- இருந்ததை உயர்த்தி ரூ.2800/- எனவும் மாற்றம் செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.
- முதுநிலை ஆய்வாளர் பதவியிலிருந்து கூட்டுறவு சார் பதிவாளராக பதவி உயர்வு அளிக்க 1.5.2013 நாளுக்கான பட்டியல் தயாரிக்க நமது சங்கத்தின் தீவிர முயற்சியால் பதிவாளரின் ஆணை பெறப்பட்டது.
- நமது சங்கம் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மூலமாக தமிழக அரசினை கோரியது விளைவாக பணி ஓய்வு பெற்ற சார்நிலை அலுவலர்கள் வரையிலான ஒழுங்கு நடவடிக்கைகளை முடிவுகட்டும் அதிகாரம் பதிவாளருக்கு அளிக்கப்பட்டு, தற்போது பதிவாளர் அவர்களால் இதனில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நமது தாய்ச்சங்கத்தின் முயற்சியின் காரணமாக கடவுச்சீட்டு (Passport) பெறுவதற்கான தடையின்மைச் சான்று வழங்கிடும் அதிகாரம் தமிழக அரசினால் சார்நிலை அலுவலர்களை வரை பணிநியமன அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நமது சங்கத்தின் தீவிர முயற்சியின் காரணமாக கூட்டுறவு ஜனநாயகம் தழைத்திட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. நமது சங்க முயற்சியால் தொடர்ந்து அனைத்து பதவிகளுக்கும் பதவி உயர்வு பெற்று தந்தது.
- எப்போதும் இல்லாத அளவுக்கு 72 கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு துணைப்பதிவாளராக பதவி உயர்வு பெற்று தந்தது.
- இதுபோன்ற மேலும் பல முக்கியச் செயல்பாடுகளில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்து புதுவேகத்துடனும், புதுப்பொலிவுடனும் சங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது.